00:00 IST 34°C

சென்னை மெட்ரோ ஆன்லைன் டிக்கெட் சேவை முடங்கியதால் பயணிகள் அவதி

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று காலை ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கவுன்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டதாக நிர்வாகம் அறிவித்தது.

எழுதியவர் திராவிடன் செய்திப் பிரிவு

· 1 நிமிட வாசிப்பு

ஆலந்தூர் நிலையத்தில் சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் (கோப்புப் படம்). படம்: Wikimedia Commons

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று (அக். 3) காலை ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு பெறும் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி, க்யூஆர் குறியீடு, வாட்ஸ்ஆப், பேடிஎம், போன்பே உள்ளிட்ட இணையவழி டிக்கெட் சேவைகள் அனைத்தும் முடங்கின. இதையடுத்து, பயணிகள் டிக்கெட் கவுன்டர்களில் டிக்கெட் பெற்றுக்கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் காலையில் அறிவித்தது. இதனால் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன; அலுவலக நேர நெரிசலில் பயணிகள் தவித்தனர்.

பின்னர், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு ஆன்லைன் டிக்கெட் சேவை வழக்கம் போல் இயங்குவதாக நிர்வாகம் அறிவித்தது. ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது.

டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை நோக்கி மெட்ரோ நிர்வாகம் பயணிகளைத் தள்ளி வரும் நிலையில், இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் அடிக்கடி நிகழ்வது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'சிங்கார சென்னை அட்டை' மற்றும் 'சிஎம்ஆர்எல் பயண அட்டைகள்' வைத்திருப்போரும் கவுன்டர்களையே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

முக்கிய பொதுப் போக்குவரத்து அமைப்பின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இவ்வளவு எளிதில் முடங்குவது, அதன் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. கோளாறுக்கான காரணம் குறித்து நிர்வாகம் வெளிப்படையாக விளக்க வேண்டும் என பயணிகள் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

AMP

தொடர்புடைய கட்டுரைகள்

மாணவர் ரோபோட்டிக்ஸ் போட்டி (கோப்புப் படம்)
தொழில்நுட்பம்

சாம்சங் 'சால்வ் ஃபார் டுமாரோ' இறுதிச் சுற்றில் தமிழ்நாட்டு மாணவர்கள்: செயற்கை நுண்ணறிவில் அசத்தல்

சாம்சங் நிறுவனத்தின் 'சால்வ் ஃபார் டுமாரோ 2026' போட்டியின் முதல் 20 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மாணவர் குழுக்கள் தேர்வாகியுள்ளன. தொழிலாளர் பயிற்சி, சாலைப் பாதுகாப்பு, பார்கின்சன் நோய் பராமரிப்பு ஆகியவற்றுக்கான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

· 1 நிமிட வாசிப்பு